அம்மா – பூ முகம் சிவக்க/amma-poo mugam sivakka

அம்மா – பூ முகம் சிவக்க

பூ முகம் சிவக்க
சோகம் என்ன நான் இருக்க
தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு
இனி நானே உந்தன் தாயே

நீ எந்தன் தோளின் மீது
முகம் சாய்த்து கண்கள் மூடு
தாய் என்று என்னை கொண்டாடு
உறவென்று பாடு
சுடும் வெயிலில் நடந்து வந்த நேரம்
இவள் விரும்பி சுமந்து கொண்ட பாரம்
சின்ன உதடு கனவுகளில் பேசும்
செவி அதனை ஒழிந்து நின்று கேட்கும்

பூ முகம் சிவக்க
சோகம் என்ன நான் இருக்க
பூ முகம் சிவக்க
சோகம் என்ன நான் இருக்க

என் வீணை போனதெங்கே
கலைகின்ற ராகம் இங்கே
அவன் தூங்க வைத்தேன் அங்கே
என் தூக்கம் எங்கே
இந்த இரவு விடிந்து விட வேண்டும்
இல்லை பருவம் கரைந்து வேண்டும்
இந்த இரவு விடிந்து விட வேண்டும்
இல்லை பருவம் கரைந்து வேண்டும்

பூ முகம் சிவக்க
சோகம் என்ன நான் இருக்க
தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு
இனி நானே உந்தன் தாயே

ஆரிரோ ராரிரோ ஆரிரரி ராரி ரரோ
ஆரிரோ ராரிரோ ஆரிரரி ராரி ரரோ

பின் குறிப்பு :

இந்த பாடலுக்கும் எனக்கும் ஒருதொப்புள் கொடி உறவு உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.கருவில் இருக்கும் போதே நான் இந்த பாடலை கேட்டு விட்டேன்(அம்மா சொல்லி தெரியும்).சோகம் படிந்த பாடல் வரிகள். கேட்கும் போதெல்லாம் ஏனோ என் கண்கள் குளமாகி விடும்.

பதித்தவர் ஒற்றை நட்சத்திரம் பதித்த நேரம்

Tags: , , , , , , , , , , , , ,

Leave a comment