Posts Tagged ‘eelam song lyrics’

விடை கொடு எங்கள் நாடே…(கன்னத்தில் முத்தமிட்டால்)/kannathil muthamitaal-vidai kodu engal naadey

December 12, 2009

விடை கொடு எங்கள் நாடே…(கன்னத்தில் முத்தமிட்டால்)

தமிழகத்திற்கு இது மழை காலம், வீடு, வீதி என்று இடம்,பொருள், ஏவல் பாராமல் வெள்ளத்தின் ஆதிக்கம்.
இதனால் பள்ளிகளுக்கு விடுப்பு.பிள்ளைகளுக்கோ விளையாட்டு.
இது போதவில்லை என்று மின் தடை வேறு.நெடுந்தொடர்கள் பார்க்க முடியவில்லை என்று நொந்து கொள்ளுபவர்கள்.
வெள்ளத்தில் பாலம் போனது,இடி தாக்கி இயற்கை மரணம் அடைந்தவர்கள் என்று அதன் முக்கிய பாதிப்புக்கள் மறு புறம்.
ஆனால் கடல் மட்டுமே பிரித்த நம் உடன் பிறவா சகோதர சகோதரிகள் இலங்கையில் படும் அவதிகளுடன் ஒப்பிட்டால் நம் அவதிகள் எல்லாம் தூசு தான்.
நிலவொளி மட்டுமே வெளிச்சம் காட்டும் காடுகளில் பதுங்கியும், குண்டு மழையால் குருதி வெள்ளத்தில் நனைந்தும், உரிமை,உடைமை,தன்மானம், எல்லாவற்றையும் இழந்து அவர்கள் படும் அவதிகளுக்கு என் போன்றவர்கள் வேதனை,பிரார்த்தனை மட்டும் தான் செய்ய முடிகிறது என்ற போது மனம் வெதும்புகிறது,
பிறந்த நாளிற்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பாடல் விருப்பம் தெரிவிக்க சன் மியூசிக் இசை அருவி என்று தொலை பேசியில் வரிசை காத்து பேசுகிறோம்.
உயிர் காக்க அயல் நாட்டில் குடி பெயர்ந்து, என்றாவது பிறந்த மண்ணில் குடி உரிமையோடு மீண்டும் கால் பதிப்போம் என்று நம்பிக்கையோடு வாழும் தமிழர்களுக்கும், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று அங்கயே இன்னும் அவலங்களை தாங்கி கொண்டு வாழும்,போராடும் அனைத்து தமிழ் சகோதர,சகோதரிகளுக்கும், அவர்களின் வேதனைகளை கருவாய் கொண்டு உரு பெற்ற இந்த திரைப்பாடலின் வரிகள் இங்கே.

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே
பறவைகள் கூடே
மறு முறை,ஒரு முறை பார்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர் வலம் போகின்றோம்..

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே
பறவைகள் கூடே
மறு முறை,ஒரு முறை பார்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர் வலம் போகின்றோம்..

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
சுகந்திரம் வருமா?வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே
பிரிவோம் நதிகளே
பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம்
அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில்
பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே
பறவைகள் கூடே
மறு முறை,ஒரு முறை பார்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர் வலம் போகின்றோம்..

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளம் திங்கள் வெடி குண்டு புதையிலே புதைத்தோம்
முன் இரவில் மலரில் கிடந்தோம்
பின் இரவில் முள்ளில் கிடந்தோம்
கடல் நீர் பறவையாய் இருந்தால் சந்திப்போம்
வனமே, மலர்களே வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம், நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்.

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மாற காடே
பறவைகள் கூடே
மறு முறை,ஒரு முறை பார்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர் வலம் போகின்றோம்..

கரு : வைரமுத்து
உரு: மணிரத்தினம்
உயிர்: எ.ர.ரஹ்மான்